சூலூரில் வீடுகளுக்குள் புகுந்த நீர்..!

பருவமழை காரணமாக சூலூர் பெரியகுளம் நிறைந்து உபரி நீர் சிறிய குளத்திக்கு வருகை தந்து கொண்டிருந்தது சிறிய குளமும் நிரம்பியதால் அதிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் சூலூர் மதியழகர் பகுதியில் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்தது உபரிநீர் செல்லும் பாதையில் உள்ள பாலத்தின் உள்ளே ஆகாயத் தாமரைகள் புகுந்து நீர்வழி பாதையை அடைத்ததன் காரணமாக தண்ணீரானது வீடுப் பகுதிக்குள் சென்றது தகவல் அறிந்ததும் உடனடியாக சூலூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மன்னவன், பேரூராட்சி தலைவர் தேவிமன்னவன், திமுக நகரச் செயலாளர் கௌதமன் ,மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் பசுமை நிழல் er.விஜயகுமார், மக்கள் பொதுநல மன்ற தலைவர் டால்பின் மாரிமுத்து வார்டு கவுன்சிலர் வேலுச்சாமி, வெண்ணிலா  மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்து வெளியேறிக் கொண்டிருக்கும் தண்ணீரின் அளவை கட்டுப்படுத்தி உடனடியாக பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அடைத்திருக்கும் ஆகாயதாமரைகள் முழுவதும் அப்புறப்படுத்தி சூலூர் பேரூராட்சி மூலம் பம்ப்செட் பொருத்தப்பட்டு வீட்டு பகுதியில் இருக்கும் நீரை வெளியேற்றியும் மீட்பு பணியில் ஈடுபட்டனர் தகவல் அறிந்ததும் சூலூர் வட்டாட்சியர் நித்திலவள்ளி சூலூர் R I மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வருகை தந்து தண்ணீர் புகுந்த பகுதியினை பார்வையிட்டு எந்த ஒரு சேதாரம் இல்லை என்பதை உறுதி செய்து சென்றனர்.