40 ஆண்டுகால பொது சேவையை பாராட்டி கோவை
சி.எம்.ஸ்டீபன் ராஜ் அவர்களுக்கு சமூக நீதிக் காவலர் எனும் விருது வழங்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அகில இந்திய உழைப்பாளர்கள் மக்கள் கட்சியின் சார்பில் நடந்த கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள், மற்றும் பட்டியலின் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் நிறுவனத் தலைவர் களப்போராளி
வி. ஏ. ஜார்ஜ் தலைமை தாங்கினார்,
பி.நசீர் உசேன் அனைவரையும் வரவேற்றார்.
வி.ஜி.ஈஸ்டர், வி.ஜி. ஜான், எஸ்.சாமு பிரியா,
வி. கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முனைவர் எஸ். ஏ. இறையடியார் மாநிலச் செயலாளர்,
ஆர்.சாதத்துல்லா, பேராயர் டாக்டர். எஸ். மணி தாசன், அகில இந்திய அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் இரா. மாமல்லன், தமிழக சமத்துவ ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் அரந்தை எஸ். எம்.கே.பாவா, மாநில பொருளாளர் சையது அபுதாகிர், புதிய விடுதலை கட்சியின் ஆந்திர மாநில தலைவர் இக்பால், ஆதி பறையர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சாத்தை இளங்கோவன், எம். எஸ். அப்துல்லா, தமிழக சமத்துவ ஜனநாயக கட்சியின் பிரமுகர் முத்தாட்சி பேகம், அம்பேத்கர் திராவிட மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர்.ஏ.கே. ராதாகிருஷ்ணன், மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர். ஷாஜகான், தாழ்த்தப்பட்டோர் இன விடுதலை இயக்கத்தின் நிறுவனத் தலைவர். க. கருப்பையா, புதிய விடுதலை கட்சியின் பொதுச்செயலாளர்
ஏ. ரசூல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த விழாவில் அனைத்து சமய மத சமூக நல்லிணக்க பேரவையின் மாநில அமைப்பாளர் மனிதநேய பண்பாளர் ஜி. கோவிந்தசாமி அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத் தலைவர். கோவை
சி.எம். ஸ்டீபன் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றி மாநாட்டில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் பெண்கள் 100 பேருக்கு புடவைகளை வழங்கினர்.மற்றும் 40 ஆண்டுகளுக்கு மேலாக கோவை மாநகரில் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து மத தலைவர்களோடு நட்போடு பழகி அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்ல நட்புறவை ஏற்படுத்தி தொடர்ந்து உதவிக்கரம் புரிந்து வரும் கோவை சி.எம். ஸ்டீபன் ராஜ் அவர்களுக்கு சமூக நீதி காவலர் என்ற விருது வழங்கப்பட்டது. மாநாட்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாரை ஆதரிப்பது எனவும் 45 ஆண்டுகளாக பொது தொகுதியாக உள்ள தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் ஆம்பூர் தொகுதியை ரிசர்வ் தொகுதியாக அறிவித்திட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்ட கவசது. முடிவில் விடியல் அறக்கட்டளையின் செயலாளர் எம்.ஆர். விஜியா ஜோசப் நன்றி கூறினார்.