கோவை பெண் என்ஜினியரிடம் ரூ. 13.50 லட்சம் மோசடி.

கோவை வேலாண்டிபாளையம் கே கே புதூரைச் சேர்ந்தவர் தனலட்சுமி ( வயது 49) என்ஜினியர் .இவரது டெலகிராமிற்கு வந்த குறுந்தகவலில் ஆன்லைன் செயலி மூலம் நாங்கள் கொடுக்கும் பணியை முடித்துக் கொடுத்தால் அதிக அளவில் பணம் கிடைக்கும் எனவும் அதற்கு சிறிது முதலீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது .இதை நம்பிய தனலட்சுமி அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து தனது விவரங்களை பதிவு செய்தார் .தொடர்ந்து ஆன்லைனில் சிறிது சிறிதாக அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளில் ரூ. 13 லட்சத்து 64 ஆயிரம் முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு எந்தவித தொகையும் திரும்ப கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் அந்த நபரை தொடர்பு கொண்டு கேட்டபோது 16.50 லட்சம் செலுத்தினால் தான் நீங்கள் முதலீடு செய்த தொகையை லாபத்துடன் திரும்ப எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். அதன்பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த தனலட்சுமி இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.