கோவை நகைக்கடையில் 200 பவுன் தங்க-வைர நகைகள் கொள்ளை,முகமூடி கொள்ளையன் கைவரிசை. 5 தனி படைகள் அமைப்பு.

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் என்ற பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடையில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பணியாளர்கள் அனைவரும் பணி முடிந்து விற்பனைக்கு பின் நகைகளை சரிபார்த்தபின் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை 9 மணி அளவில் நகை கடை திறக்கப்பட்டது .கடை மேலாளர் மற்றும் ஊழியர்கள் கடைக்குள் சென்றனர். ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் உள்ள நகைகளை ஆய்வு செய்தனர்.. அப்போது ஒவ்வொரு பிரிவுகளிலும் நகை குறைவாக இருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்துவந்து பார்த்தனர். அப்போது 2 மாடிகளிலும் இருந்த நகைகள், லாக்கரில் இருந்த பல நகைகள் மாயமாகி இருந்தது. இதை தொடர்ந்து நகை கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கடை மேலாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் கடைக்குள் வந்த மர்ம ஆசாமி ஒருவன் தன் சட்டையை முகமூடி போல் அணிந்து ஒவ்வொரு தளமாக சென்று கண்ணாடி லாக்கரில் ஷோகேசில் உள்ள நகைகளை தான் வைத்திருக்கும் பையில் எடுத்து போடும் காட்சி பதிவாகி இருந்தது. மொத்தம் 200 பவுன் தங்க-வைர நகைகள் கொள்ளை போய் உள்ளதாக கடை மேலாளர்கள் தெரிவித்தனர் .இது குறித்து காட்டூர் போலீசுக்குதகவல் தெரிவிக்கப்பட்டது.இது பற்றி தகவல் அறிந்ததும்.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் சண்முகம், சந்தீஷ், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்த்தஆய்வு செய்தனர். முதல் கட்ட விசாரணையில் நகைக்கடையில் பக்கவாட்டில் மருந்து கடை அருகே உள்ள சிறிய சந்து வழியாக வந்த கொள்ளையன் ஏசிக்காக அமைக்கப்பட்டிருந்த வெண்டிலேட்டரை உடைத்து உள்ளே புகுந்துள்ளான். பின்னர் அங்கிருந்து முதல் தளம் இரண்டாவது தளத்துக்குச் சென்று நகைகளை கொள்ளை அடித்ததும் பின்னர் அதே வழியாக வெளியே வந்து தப்பிச் செல்வதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நகைக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சரியாக நள்ளிரவு 2. -29 மணிக்கு கடைக்குள் மர்ம நபர் புகுந்தார். அவர் தனது முகம் தெரியக்கூடாது என்பதற்காக சட்டையை முகமூடி போல் அணிந்து கொண்டு ஒவ்வொரு தளமாக சென்று நகைகளை கொள்ளை அடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும் அவன் வெளியில் வரும் போது கைகளை தனது முகத்தை மறைத்தபடி வரும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. போலீசார் கொள்ளையன் முகத்தை அறிய சாலை மற்றும் கடையின் முன்பாக உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை முகம் தெளிவாக போலீசாருக்கு தெரிவந்துள்ளது. இதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்பநாய்மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்தனர். கைரேகை நிபுணர்கள் கடையில் பதிந்திருந்ததடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் நகைக்கடையில் இருந்து பின்புறம் வழியாக கார் பார்க்கிங் பகுதியை ஒட்டி உள்ள எலக்ட்ரிகல் போர்டு அமைக்கும் பகுதிக்கு சென்று நின்று கொண்டது..அப்போது அங்கு கொள்ளையன் பயன்படுத்திய சட்டை முக கவசம் மற்றும் இரும்பு கம்பி கிடந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர் .கடையை விட்டு சாலைக்கு செல்லும் முன்பு கொள்ளையன் தனது சட்டையை கழட்டி கார் பார்க்கிங் பகுதியில் வீசிவிட்டு மற்றொரு சட்டையை அணிந்து கொண்டு தப்பி சென்றுள்ளார்.நகைக்கடையின் கீழ் தளத்தில் இரும்பு கம்பிகள் பொருத்தும் வேலை நடைபெற்று வருகிறது. இந்த கட்டிட பணிகளில் ஈடுபட்டவர்கள் நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருக்கிறார்களா? என்று சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 200 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.இந்தக் கொள்ளையன் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அதாவது ஒரு கண்ணாடி ஷோகேசில் ஒரு நகை என்று நகைக்கடையில் இரண்டு தளத்தில் உள்ள அனைத்து சோக்கேசிலும் ஒவ்வொரு நகையாக தேர்வு செய்து கொள்ளடித்துள்ளார். அதில் அவர் தனக்கு பிடித்தமான நகைகளை மட்டும் அள்ளிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதுதான் ஊழியர்கள் வேலைக்கு வந்ததும் கொள்ளை சம்பவம் குறித்து உடனடியாக தெரியவில்லை. நகைகளை கணக்கீடு செய்த பிறகுதான்கொள்ளை சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது. இதையடுத்து தான் கடை மேலாளர்கள் போலீசருக்கு தகவல்தெரிவித்துள்ளனர்.கொள்ளை நடந்த நகைக்கடையை ஆய்வு செய்த பின் கோவை மாநகர போலீஸ் கமிஷனர்பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நகைக் கடை கட்டிடத்தில் 12 ஊழியர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்கிறார்கள். நள்ளிரவில் வென்டிலேட்டர் வழியாக வந்த ஒருவன் உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளான். அவனது பின்னணியில் வேறு நபர்கள் உள்ளனரா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொள்ளையன் வெளியூரை சேர்ந்தவன் போல தெரியவில்லை. அவைது நடவடிக்கை வித்தியாசமாக உள்ளது .விரைவில் கொள்ளையனை பிடித்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.