தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, ஆலந்தூர், மடிப்பாக்கம், நங்கநல்லூர், சைதாப்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, விருகம்பாக்கம், கோயம்பேடு, முகப்பேர் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால், முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக, வாகனங்கள் மழைநீரில் தத்தளித்தபடி செல்கின்றனர். சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் தொலைப்பேசி அழைப்பை எடுத்து முதல் அமைச்சர் பேசினார். தொடர்ந்து, மழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல் அமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும், மழை நீர் அகற்றம் தொடர்பாக சென்னை முழுவதும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாநகராட்சி மேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார.