விஸ்வ பாரத் மக்கள் கட்சி துவக்கம்-கோவை

கோவை: விஸ்வகர்மா மக்கள் வாழ்வு முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட விஸ்வ பாரத் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது.

கோவையை சேர்ந்தவர் பாபு ஜி சுவாமிகள். நிலவேம்பு சித்தர் என்று அழைக்கப்படும் இவர் கொரோனா காலத்தில் பல்வேறு மக்கள் சேவை ஆற்றினார்.

மேலும், நிலவேம்பு கஷாயத்தை அறிமுகப்படுத்தி அதனை முழுமையாக மக்கள் மத்தியிலும் கொண்டு சேர்த்தார். இதனிடையே விஸ்வகர்மா சமுதாய மக்கள் முன்னேற்றத்திற்காக விஸ்வ பாரத் மக்கள் கட்சியை துவங்கியுள்ளார்.

தொடர்ந்து, கட்சியின் முதல் ஆலோசனைக்கூட்டம் கோவை கோபாலபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் கட்சிக்கொடி அறிமுகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பாபு ஜி சுவாமிகள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

விஸ்வகர்மா மக்கள் வாழ்வு முன்னேற்றமடைய இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது

முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து எங்கள் 5 அம்ச கோரிக்கையை அளித்துள்ளோம்.

தமிழகத்தில் மட்டும் விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்த 85 லட்சம் மக்கள் உள்ளனர். இவர்கள் தச்சு வேலை, இரும்பு வேலை, பாத்திரம் மற்றும் தங்கம் வேலை செய்து வருகின்றனர்.

பாரம்பரியமாக தொழில் செய்து வரும் சூழலில் தற்போது தொழில் நடத்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

விஸ்வகர்மா சமுதாய குழந்தைகளுக்கு 3.5 இட ஒதுக்கீடு வேண்டும். சிறுபட்டறைகளுக்கு இலவச மின்சாரம் வேண்டும். தச்சு தொழிலுக்கு சலுகை விலை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதற்கு தமிழக அரசுக்கு நன்றி

தங்க நகை தொழிலாளர்களை அரசு வேலையில் நியமனம் செய்ய வேண்டு. வீடு இல்லாமல் தொழில் நலிவடைந்துள்ள, பெண்களுக்கு இடத்துடன் கூடிய சொந்த வீடு வேண்டும். விஸ்வகர்மா காலனி அமைத்து கொடுக்க வேண்டும்.

விஸ்வகர்மா மக்கள் தொழில் முன்னேற்றமடைய மத்திய அரசு விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை அறிவித்துள்ளது. ஐந்தொழிலாளர்களுக்கு ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் கொடுக்க வேண்டும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதியின் போது விஸ்வகர்மா மக்களை கோவிலில் இந்து சமய துறைக்கு உட்பட்ட அறங்காவலராக நியமிப்போம் என்றனர். இன்னும் செய்யவில்லை. மிக பிறடுத்தப்பட்டோர் பட்டியலில் விஸ்வகர்மா மக்களை இணைக்க வேண்டும்.

எங்கள் கட்சியில் தற்போது 26 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது ஜாதி கட்சியாக செயல்படாது. அனைத்து ஜாதி மக்களையும் அரவணைத்துச் செல்லும் கட்சி இது.

எந்த கட்சிக்கும் நாங்கள் எதிரி கட்சியாக செயல்படப்போவதில்லை, எங்களது கோரிக்கைகளை அரசுக்கு கொண்டு செல்ல எங்களுக்கு பிரதிநிதி தேவை

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டதில் கட்சியின் தலைவர் வில்வராஜன், பொருளாளர் சிவராஜ், மகளிரணி செயலாளர் ராதா ராஜன், சேலம் மாவட்ட தலைவர் முருகேசன், மாநில இளைஞரணி செயலாளர் பிரகாஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.