கோவையை சேர்ந்த 43 வயதான நபர் ஒருவர் ஆயுர்வேத மசாஜ் செய்ய விரும்பினார். இவர் இதற்காக ஆன்லைனில் பல்வேறு தகவல்களை தேடினார். ஒரு செயலியில் ஆயுர்வேத மசாஜ் விவரங்களை பார்த்து தொடர்பு கொண்டு பேசினார் .அப்போது அவர் இளம்பெண்கள் மூலம் நீங்கள் விரும்பும் இடத்திற்கு வந்து மசாஜ் உள்ளிட்ட சேவைகள் செய்து தருவதாகவும், அதற்கு முன் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதை நம்பிய 43 வயதான நபர் தனக்கு மசாஜ் செய்ய இளம்பென்களை மட்டும் அனுப்புமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் பணம் அனுப்ப கூறியஎண்ணுக்கு பல்வேறு கட்டமாக ரூ 8 லட்சம் வரை அனுப்பியுள்ளார். ஆனால் மசாஜ் செய்ய பெண்களை அனுப்பாமல் இருந்தது தெரியவந்தது. இது குறித்து 43 வயதான நபர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் .போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ண உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மோசடி செய்தது பொள்ளாச்சி மகாலிங்கபுரம், சேரன் நகரை சேர்ந்த ஹரி பிரசாத் (வயது 30) மற்றும் அவரின் நண்பர்கள் பொள்ளாச்சி பணிக்கம்பட்டி மகேந்திரன் ( வயது 26) தேவனாம்பட்டி சக்திவேல் (வயது 25) ஈரோடு சரவணமூர்த்தி (வயது 23 )திருப்பூர் அருண்குமார் (வயது 24) மற்றொரு சக்திவேல் (வயது 29) ஜெயபாரதி (வயது 22) மகேந்திரன் ( வயது 30) கோகுல் (வயது 31) என்பது தெரிய வந்தது .இதைத் தொடர்ந்து அவர்கள் 9பேரையும் போலீசார் பெங்களூர் சென்று கைது செய்தனர். ஹரி பிரசாத் தலைமையில் இவர்கள் கூட்டாக சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். “லொக்காண்டா” செயலியில்வரும் தகவல் விவரங்களை கேட்பவர்களை குறி வைத்து இந்து கும்பல் மோசடி செய்து வந்துள்ளது .இதற்காக இவர்கள் புதிதாக சிம்கார்டுகள் வாங்கி புதிய வங்கி கணக்குகள் தொடங்கி பணம் பெற்றுள்ளனர். மோசடி செய்து பணம் குவிக்க ஆசைப்பட்டு அவர்களை திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர் மும்பை, பெங்களூர், கோவா உள்ளிட்ட பகுதிகளில் தங்கி இந்த கும்பல் மோசடி அரங்கேற்றியாக தெரிகிறது.