கோவை உப்பிலிபாளையம், வெங்கடேசா நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் ஹரிப்பிரியா ( வயது 19)கோவையில்உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி .2-ம்ஆண்டு படித்து வருகிறார்.நேற்று முன்தினம்கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.இவர் கே.எப்.சி யில் வேலை பார்க்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவருடன் எங்கோ மாயமாகி விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது .இது குறித்து அவரது தாயார் வினோதினி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்