கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள தோளம்பாளையம், செங்குழி பகுதியைச் சேர்ந்தவர் சாலமன் ( வயது 62 )ஆட்டோ டிரைவர் ‘இவர்நேற்று முன்தினம் கோவை- ஆனைகட்டி ரோட்டில்ஆட்டோ ஓட்டிக் கொண்டு சென்றார் .தெக்கலூர் பிரிவு அருகே சென்றபோது திடீரென்று நிலை தடுமாறி ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவுக்கு அடியில் சாலமன் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மகன் கார்த்திக் தடாகம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.