கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோடு, இந்து மாநகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( வயது 58) வியாபாரி. இவர் கடந்த 2ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 34 பவுன் தங்க_ வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து பாலகிருஷ்ணன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தமிழரசு, சப் இன்ஸ்பெக்டர் சரத்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கதவில் பதிவாயிருந்த கொள்ளையர்களின் 2 கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.