திருச்சியில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அதேபோல் நடிகர் விஜய் ரசிகர்களும் விஜயகாந்த் நலம் பெற வேண்டி பிரார்த்தனையில் இறங்கி உள்ளனர். திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நடிகர் விஜயகாந்த் நலம் பெற வேண்டி விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்துள்ளனர்.
இதுதவிர திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சார்பில் விஜயகாந்த் பெயருக்கு அங்குள்ள சிவன் மற்றும் பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அக்கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு விஜய் ரசிகர்கள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டி விஜய் ரசிகர்கள் செய்த இந்த செயல் கவனம் ஈர்த்துள்ளது.
இதேபோல் நாகையில் உள்ள ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேமுதிக மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. இந்நிகழச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அருள்மாணிக்கம், மாவட்ட துணை செயலாளர்கள் பிரபாகர், பூமிநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் பக்கிரிசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதுதவிர மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நிர்மலா குமார், குபேந்திரன், வழிவிட்ட அய்யனார், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் ராஜா, கார்த்தி,மாவட்ட நிர்வாகி திருமலை ஐயப்பன், நகர செயலாளர்கள் செல்வகுமார், ராமநாதன், ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், நடராஜன், கு.ப.செந்தில்குமார், முரசு முருகா, செந்தில்குமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிப, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்இது விஜயகாந்த் ரசிகர்களுக்கு
நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சி செய்தியாளர் H. பஷீர்.