கோவை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது.

கோவை மாவட்டம் ஆலாந்துறை-அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஆனந்தகுமார்.இவர் மீது அந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார்.இது குறித்து முதன்மை கல்வி அதிகாரிக்கும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் ஆலந்துறை போலீசார் உடற்கல்வி ஆசிரியர் ஆனந்த குமாரை நேற்று காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் ஆனந்தகுமாரை இன்று கைது செய்தனர் .இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியர் திருமணம் ஆகாதவர்.இவர் 2020ல் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வில் தேர்வாகி அரசு பணிக்கு வந்தவர் ஆவார்.அரசு பணிக்கு வந்து 4ஆண்டுகளில் போக்சோ வில் சிக்கி உள்ளார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.