கோவை துடியலூர் பக்கம் உள்ள குமரபுரத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் ( வயது 75) சர்வதேச கைப்பந்து வீரர்.இவர் உடல்நல குறைவால் நேற்று இரவு மரணம் அடைந்தார்”பி.ஏ. பட்டதாரியான இவர் தலைசிறந்த கைப்பந்து வீரர் ஆவார்.1970 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை கைப்பந்து விளையாடி சாதனை படைத்துள்ளார். இந்திய கைப்பந்து அணியில் முக்கிய பங்கு வகித்தார்.இலங்கை, பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளை எதிர்த்து விளையாடி வென்றுள்ளார்.சென்னை பல்கலைக்கழக கைப்பந்து கேப்டனாகவும் இருந்துள்ளார்.இவர் பல்வேறு உயர் விருதுகளும் பெற்றுள்ளார்.எஸ்.பி.ஐ. வங்கியில் அதிகாரியாகவும் பணியாற்றினார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.இவரதுஉடலுக்கு ஏராளமான கைப்பந்து வீரர்களும், முக்கிய பிரமுகர்களும், கோவை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பிலும் மற்றும்ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரிகளும் ,வங்கி அதிகாரிகளும், நண்பர்களும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் .இறுதிச் சடங்கு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரிக்கால் மின்மயானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு நடக்கிறது.