குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை மன்சரிவால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு முன்னேற்பாடுகள் செய்யாததால் மக்கள் தவிப்பு

 

 

நீலகிரி குன்னூர் மேட்டுப்பாளையம் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் குன்னூர் மேட்டுப்பாளையம் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றன, இந்நிலையில் பர்லியார் சோதனை சவாடி அருகே நேற்று காலை 7.50 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது,
மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த வாகனங்கள் , மற்றும் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல வாகனங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டது, இதனால் விமான பயணம், ரயில் பயணம், மருத்துவ சிகிச்சை, பலவிதமான முக்கிய பணிகளுக்கு ஏற்ற நேரத்தில் செல்ல முடியாமல் சிக்கித் தவித்தனர்,
மழைக்காலங்களில் முன்னேற்பாடாக ஜேசிபி வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால்
மூன்று மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்காது என்று பொதுமக்கள் கோபத்துடன் கூறினர், இவ்வழியாக பயணம் மேற்கொண்ட மத்திய தகவல் துறை இணைய அமைச்சர் எல் முருகன் அவர்கள் பயணம் பாதிக்கப்பட்டது, மற்றும் 200க்கும் மேற்பட்ட பயணிகள் வாகனங்கள் சாலையில் தப்பித்து நின்றது, மண் சரிவு உடனடியாக எடுக்க ஜேசிபி வாகனம் இல்லாததால் இரண்டு மணி நேரம் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாயினர் , மத்திய அமைச்சர் எல் முருகன், மண் சரிவிடத்தை பார்வையிட்டு கூறியதாவது இத்தகைய மழைக்காலங்கள் முன்னெச்சரிக்கையாக ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி இருக்க வேண்டும்.என்றார், வரும் மழைக்காலங்களில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் அரசு அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார், நீலகிரி பாஜக மாவட்ட தலைவர் மோகன்ராஜ், பாராளுமன்ற பொறுப்பாளர் நந்தகுமார், மற்றும் பாராளுமன்ற இணைய அமைப்பாளர் கதிர் ஆகியோர் உடன் இருந்தனர்,
மத்திய அமைச்சரின் உத்தரவின் பெயரில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நெடுஞ்சாலை துறையின் சார்பாக ஜேசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு நெடுஞ்சாலைத் துறையினர், மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குன்னூர் ஹைவேஸ் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ், ஹைவேஸ் எஸ்ஐ செல்வராஜ், பர்லியார் சோதனை சவாடி ஆய்வாளர் பன்னாரி 20க்கும் மேற்பட்ட காவலர்கள் உதவியுடன் சாலை சீரமைக்கப்பட்டது, மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மழைக்காலங்களில் ஜேசிபி வாகனம் மற்றும் தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கையாக இருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள்