திருச்சி 53 வது வார்டு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மாமன்ற உறுப்பினர் ஆய்வு.

 

திருச்சி மாநகராட்சி 53வது வார்டு மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி பீம நகர் எஸ்பிஜி ஸ்கூல் அருகில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மற்றும் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் இருக்கும் குறைகளை மாமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று மக்கள் தெரிவித்த குறைகளை சரி செய்து பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகின்றார். பொதுமக்களும் சக கட்சிக்காரர்களும் அவரை எளிதில் அணுகி தொகுதிக்கு வேண்டிய பணிகளை அவரிடம் தெரிவித்தால் உடனடியாக அதை சரி செய்து கொடுத்து விடுவார் என்ற கருத்து பொதுமக்களிடையே இருந்து வருகிறது. மேலும் பீமநகர் பகுதியில் ஹீபர் ரோடு சாலையில் இருந்து செசன்ஸ் நீதிமன்றம் வரை சாக்கடை கால்வாய்கள் மிகவும் மோசமாக உடைந்து போயிருந்ததை புதிய சாக்கடை கால்வாயாக மாற்றி இருப்பது பொதுமக்களிடயே மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.