சென்னையில்ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புக்குஉதவும் வகையில் கோவை மாவட்ட தமிழக வியாபாரிகள் சம்மேளனம்சார்பில் ரூ15 லட்சம் மதிப்புள்ளநிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி பாய்கள், பெட்ஷீட் ,லுங்கி, நைட்டி , பிளாஸ்டிக்பக்கெட், மற்றும் உணவுப் பொருட்கள் வாங்கப்பட்டன.இவைகள் ஒரு லாரி மூலம் இன்று சென்னைக்கு அனுப்பப்பட்டது.இதை தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைமை கமிட்டி தலைவர் எஸ்.. எம்.பி. முருகன் கொடி அசைத்துதொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் தலைமை கமிட்டி பொதுச்செயலாளர் உதயகுமார், பொருளாளர் வெனீஸ் செயலாளர் சூலூர் குணசிங் ,துணை செயலாளர் பால்ராஜ்,பாலகிருஷ்ணன்,வடவள்ளி கிளை நிர்வாகிகள் சேகர்,ஜூடு,அர்ஜுனன் ராஜேந்திரன், பாலகிருஷ்ணன்உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இந்தப் பொருள்கள் நாளை (புதன்) காலையில் சென்னை வேளச்சேரியில் புரசைவாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது.இதை தலைமை கமிட்டி தலைவர் எஸ். எம் .பி. முருகன் மற்றும் நிர்வாகிகள் நேரில் வழங்குகிறார்கள்.