நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியத்தின் சார்பில் 10 பயனாளிகளுக்கு அடையாள
அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப. வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்
கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார் உட்பட பலர் உள்ளனர்.