கோவை அருகே உள்ள எட்டி மடை, காட்டு பகுதியில்டாஸ்மாக் கடை உள்ளது..இந்த கடையின் அருகில் உள்ள பாரில் வேலை செய்யும் ஊழியர்கள் பாரின் பின்புறம் உள்ள அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 3.30 மணி அளவில் பாரின் கதவை சிலர் தட்டினார்கள். இவர்கள் திறக்கவில்லை .இதையடுத்து அந்த நபர்கள் பாரின் பின்புறம் இருந்த அறையின் கதவைத் தட்டினார்கள் அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஒரு ஊழியர் எழுந்து ஜன்னலை திறந்து பார்த்தார். அப்போது அங்கு 3 பேர் நின்று கொண்டிருக்கிறார் அவர்கள் மது வேண்டும் என்று கேட்டனர் .இப்போது இல்லை. காலையில் வாருங்கள் என்று கூறிவிட்டு ஜன்னலை அடைத்து விட்டார். அதன் பிறகு அந்த 3 பேரும் சேர்ந்து அறையின் கதவை தட்டிக் கொண்டே இருந்தனர். இதனால் கோபம் அடைந்த அந்த ஊழியர் கதவை திறந்து பாரில் மது எதுவும் இல்லை. காலையில் டாஸ்மாக் கடை திறந்ததும் வாங்கிக் கொள்ளுங்கள்.என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் துப்பாக்கியை எடுத்து மதுபாட்டில் தரவில்லை என்றால் சுட்டு கொன்றுவிடுவோம் என்று மிரட்டிஉள்ளனர். இதனால் பயந்து போன அந்த ஊழியர் அங்கிருந்த சில மது பாட்டில்களை எடுத்து அவர்கள் 3 பேரிடம் கொடுத்துள்ளார். மதுபாட்டில் கிடைத்ததும் அந்த 3 பேரும்பணம் கொடுக்காமல் அங்கிருந்து தப்பிசென்று விட்டனர் .இது குறித்து அந்த ஊழியர் கே. ஜி. சாவடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது அவர்கள் 3 பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள் போலவும் .மேலும் அவர்கள் ” ஏர்கன்” ரக துப்பாக்கியை வைத்துதான் மிரட்டி உள்ளனர் என்பதும் தெரிய வந்தது. இவர்களைபிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன்உத்தரவின்பேரில்தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் 3பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த விபின் ஆரோக்கியம் (வயது21) அர்ஜுன் (வயது 23) சுரேஷ் (வயது 21 )என்பது தெரிய வந்தது. 3 பேரையும்போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து “ஏர்கன்” ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.