சைபர் கிரைம் போலீசில் புகார்.கோவை டிச 13கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பொன் ஜெயபால கிருஷ்ணன் (வயது 65) கல்குவாரி தொழில் செய்து வருகிறார். இவர், ஆன்லைன் முதலீட்டில் ஆர்வம் காட்டிவந்தார். அப்பொழுது அவரது ஆர்வத்தை பயன்படுத்தி அவருக்குஆசை வார்த்தை காட்டி ரூ.1 கோடியே 43 லட்சம் ரூபாயை நூதனமாக
பறித்திருக்கின்றனர். இவருக்கு வெளிநாட்டு”வாட்சப் ” நம்பர் போன்று ஒரு நம்பரில் இருந்து, ரூபி டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என மெசேஜ் வந்தது. தொழில் முனைவோரான இவர், ஆன்லைனில் வர்த்தகம் செய்யலாம் என நினைத்து ஆரம்பத்தில் சிறு தொகையை செலுத்தி உள்ளார்.. அதற்கு கணிசமான லாபத்துடன் பணம் டிராஃப்ட் செய்து இருக்கிறார். பின்னர் சிறப்பு சலுகை முதலீடு என்ற பெயரில் ஒரு மெசேஜ் வந்திருக்கின்றது. அதனை நம்பி 8 தவணையாக ரூ.1 கோடியே ர 43 லட்சம் ரூபாயை அவர்கள் அனுப்பிய லிங்கில் உள்ள வங்கி அக்கவுண்டிற்கு கட்டினார். 6மாத காலத்தில் நடந்த இந்த பண பரிவர்த்தனையின் அடிப்படையில் பெரும் தொகையை முதலீடாக செய்த இவர் ட்ராப்டு செய்ய முயன்றிருக்கின்றார். ஆனால் அந்த ஆப்ஷன் பிளாக் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் சைபர் கிரிமினல்களால் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், கோவை மாநகர இணையவழி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தந்திருக்கின்றார். புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் முதலீட்டு என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்ட சைபர் கிரைம் குற்றவாளிகள், ரூ1 கோடியே 43 லட்சம் ரூபாய் பணத்தை நூதன முறையில் லாவகமாக பறித்துச் சென்றிருக்கின்றனர். நவீன உலகை பயன்படுத்தி சைபர் கிரிமினல்கள் அரங்கேற்றும் இது போன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்கள் விழித்துக் கொள்ள, அறியாத அலைபேசி நம்பரில் வரும் லிங்கை நம்பி, முதலீடு செய்ய கூடாது என பொது மக்களைசைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.