கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 38 வயது நபர் .இவர் எலக்ட்ரிசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் .அதே நிறுவனத்தில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரும் பணிபுரிந்தார். இவர்கள் இருவரும் தோழிகளாக பழகி வந்தனர். இந்த நிலையில் எலக்ட்ரிசியன் மனைவி கர்ப்பமானார் இதை யடுத்து அவர் பிரசவத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கேரள பெண் தனக்கு திருமணமாகி கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் உள்ளது .எனவே உங்களுக்கு பிறக்கும் குழந்தையை தனக்கு தத்து கொடுக்கும்படியும், அதற்கு பணம் தருவதாகவும் எலக்ட்ரீசியன் மற்றும் அவரது மனைவியிடம் கேட்டு வந்தார். இந்த நிலையில் எலக்ட்ரீசியன் மனைவிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த விஷயம் கேள்விப்பட்டதும் அந்த கேரள பெண் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் எலக்ட்ரிசனை தொடர்பு கொண்டு அந்த குழந்தை தனக்கு தத்து தரும்படியும், இதற்கு ரூ 1 லட்சத்து 20ஆயிரம் பணம் தருவதாகவும் கூறினார் .அப்போது அந்த எலெக்ட்ரிசியன் கோவை அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஒரு டீக்கடையில் நின்று கொண்டு அந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் அந்த கேரள பெண்ணிடம் எனது குழந்தையின் மதிப்பு ரூ 1 லட்சத்து 20 ஆயிரம் தானா? எனது குழந்தைக்கு ரூ.2 லட்சம் கொடுக்கலாம் அல்லவா? என்று பதிலுக்கு கூறினார். இவரது பேச்சைக் கேட்டு அங்கிருந்து பொதுமக்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்..இதனால் அவர் ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தை விற்க தான்முயற்சிக்கிறார் எந்த சந்தேகத்தில் அவரை பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். இதை யடுத்து போலீசார் குழந்தையின் தந்தையான அந்த எலக்ட்ரீசியனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்து சில நாட்களுக்கு முன்பு எனது மனைவிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. தற்போது பிறந்த இந்த ஆண் குழந்தையை நான் வளர்க்கத் தான் முடிவு செய்தேன் .ஆனால் மனைவியின் தோழியான கேரளாவை சேர்ந்த இந்த பெண் இந்த குழந்தை தத்தெடுக்க விரும்பினார். நான் அவரிடம் எனது குழந்தையை குறைவாக மதிப்பிடாதீர்கள். என்று தான் கூறினேன். குழந்தையை எதுவும் விற்க முயற்சிக்கவில்லை என்றார் .இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்குபோலீசார் தகவல் தெரிவித்தனர். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு நல கமிட்டியினர் இந்த சம்பவ குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.