கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் பிரிவு ,ரங்கா நகரை சேர்ந்தவர் மனோகரன், இவரது மகன் கார்த்திகேயன் ( வயது 29) டிப்பர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று அங்குள்ள தண்ணீர் பந்தல் ரோட்டில் காலி லாரியை ஓட்டிச் சென்றார் அப்போது ரோட்டின் மேலே உள்ள மின் ஒயரில் லாரி உரசியது. இதனால் கார்த்திகேயன் உடலில் மின்சாரம் பாய்ந்தத தூக்கி வீசப்பட்டார் -அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்இறந்தார். இது குறித்து அவரது மனைவி கவுசல்யா பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்