கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள படகு இல்லம் பகுதியில் வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்க்காக சுமார் ரூ.9 கோடி மதிப்பில் அதற்கான பணி துவங்கப்பட்டு துரிதமாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துச்சாமி அறிவுறுத்தலுக்கிணங்க திமுகவின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதிமுருகேசன் ஆலோசனையின் பேரில் இன்று அப்பகுதிக்கு சென்ற வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டு பணிகுறித்து விவரம் கேட்டறிந்து பணியை விரைந்து முடித்துத்தரவும் கேட்டுக்கொண்டார் இந்நிகழ்வின் போது 9 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் க.மகுடீஸ்வரன், மாவட்ட பிரதிநிதி டென்சிங் மற்றும் பலர் உடனிருந்தனர்