மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சார்ந்தது முதலைக்குளம் பஞ்சாயத்து.இக்கிராமத்தில் நியாய விலைக்கடை இல்லாததால் மக்கள் சுமார் 6 கி.மீ தொலைவிலுள்ள கீழப்பட்டி கிராமத்திற்குச் சென்று ரேசன் பொருட்கள் வாங்கி வந்தனர்.தங்கள் கிராமத்தில் நியாய விலைக்கடை வேண்டுமென்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அரசு சார்பில் முதலைக்குளம் கிராமத்திலேயே ரூ8.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டப்பட்டுள்ளது.கட்டிடம் கட்டப்பட்டாலும் இன்னும் மின்சார வசதி ஏற்ப்படுத்தவில்லை.மேலும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி பாத்ரூம் வசதி குறித்து திட்டமிடப்படவி;ல்லை.இப்படி அடிப்படை வசதிகள் இல்லாமல் ஒப்பந்தகாரர் பணத்தேவைக்காக அவசர கதியில் நியாய விலைக்கடை திறப்பு விழா காண உள்ளதாகவும் அவ்வாறு திறக்கப்பட்டால் மேற்கண்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுமா என்பதில் சந்தேகம் உள்ளதால் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.மேலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி விட்டு நியாயவிலைக்கடை திறக்கப்பட வேண்டுமென கிராமமக்கள் அரசுசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.