மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை.

கோவை உப்பிலிபாளையம், ஆடிஸ் வீதியை சேர்ந்தவர் சூசன் பிரீத்தி (வயது 28)இவருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் முத்துசாமிக்கும் கடந்த 13 -3- 22 அன்று திருமணம் நடந்தது.அவர்கள் கடந்த ஒரு ஆண்டாக பாப்பநாயக்கன்பாளையம்,ஜெய சிம்மபுரத்தில் வசித்து வந்தனர்.அப்போது முத்துசாமி வீட்டு செலவுக்கு தனது மனைவியிடம் பணம் கொடுக்காமல் அடிக்கடி கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவாராம்.மேலும் மனைவியிடம் பணம் வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது இதற்கு அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாயார் கோமதி, உறவினர்கள் ராஜலட்சுமி தமிழரசி ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது இது குறித்து சூசன் பிரீத்தி கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி விசாரணை நடத்தி கணவர் முத்துசாமி மாமனார் கிருஷ்ணமூர்த்தி மாமியார் கோமதி நாத்தனார் ராஜலட்சுமி உறவினர் தமிழரசி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.