கோவை வந்த தமிழ்நாடு சமூக நீதி கண்காணிப்பு குழு….

கோவை வந்த தமிழ்நாடு சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் மதிப்பிற்குரிய பேராசிரியர். சு.ப. வீரபாண்டியன் அவர்களை சமூகநீதி கூட்டமைப்பின் தலைவர் டாக்டர். அரிமா.பி.கே. ஆறுமுகம், செயல் தலைவர். ராம வெங்கடேசன், செயலாளர் டாக்டர். முகமது ரபிக், பொருளாளர் லயன் ஏ. அருள்தாஸ், துணைச் செயலாளர் கோவை. சி.எம். ஸ்டீபன் ராஜ், ஓய்வு பெற்ற காவல் துறை துணை ஆணையர் வின்சென்ட் பால்ராஜ், ராமநாதபுரம் மறை மாவட்ட கத்தோலிக்க காங்கிரஸ் நிர்வாக உறுப்பினர் அருள் டிசில் வா ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சமூகநீதி கூட்டமைப்பின் செயல்பாடுகளை குறித்தும் பேராசிரியர் சு.ப.வீ. அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் மிகச் சிறப்பான செயல்பாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்தும் மக்கள் மத்தியிலே சமூக நீதி கூட்டமைப்பின் சார்பில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி மக்கள் மத்தியிலேயே எழுச்சியை ஏற்படுத்துவது எனவும் பேராசிரியர் சு.ப.வீ. அவர்களிடம் பேசப்பட்டது.