கோவை கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவர் கைது…

கோவை கலெக்டர் அலுவலகநுழைவு வாயில் அருகே இன்று மதியம் 1 மணி அளவில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.அவர் திடீரென்று கோஷங்கள் எழுப்பி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தலையில் ஊற்றினார்.தீ வைக்க முயன்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.அவர் வைத்திருந்த பெட்ரோலை , தீப் பெட்டியை பறிமுதல் செய்தனர்.ரேஸ் கோர்ஸ் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில் அவர் தடாகம் பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பது தெரியவந்தது’இவரது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் படித்து வருவதாகவும் அந்த மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் செய்தாராம். இது தொடர்பாக எந்த நடவடிக்கை எடுக்காததால் இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிகிறது.