திருச்சி பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வயிற்று வலி…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமாங்குடியில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், காலை உணவு திட்டத்தின் கீழ், காலை உணவாக ரவா உப்புமா, சாம்பார் ஊற்றி சாப்பிட்டனர். இவர்களில், 20 மாணவ – மாணவியருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிலர் வாந்தி எடுத்தனர். இதையடுத்து மாணவர்கள் அனைவரும், லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதில், 10 மாணவர்கள், 10 மாணவியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சிகிச்சை பெற்ற மாணவர்களை, லால்குடி தி.மு.க., – எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன் பார்த்து, ஆறுதல் கூறினர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணிசாமி அளித்த புகாரின்படி லால்குடி மாணவர்கள் சாப்பிட்ட உணவில் ஏதேனும் விஷ ஜந்துக்கள் விழுந்து அதன் மூலம் உணவில் விஷம் கலந்து விட்டதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர் இச்சம்பவம் லால்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.