பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் விலங்குகள் இடம் போய் ஓட்டு கேட்கட்டும் கோவையில் விவசாயிகளின் முத்தரப்பு கூட்டத்தில் பரபரப்பு தீர்மானம்!!!
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த புதுப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக விவசாயிகளின் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் வன விலங்குகளால் பாதித்த விவசாயிகள், மற்றும் அரசு ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர், மேலும் இது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக யானை காட்டுபன்றி, மயில் மான், குரங்கு சிறுத்தை, காட்டு எருமை ,போன்ற வன விலங்குகளை கிராமங்களை சூறையாடி விவசாயத்தை அழித்து விவசாயிகள் பொதுமக்கள் மட்டுமல்லாமல் பகலில் வேலைக்கு செல்லும் அரசு ஊழியர்களை தாக்கி படுகாயம் ஏற்படுத்தியும் கொன்று வருகிறது,
விவசாயிகள் போராடியும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்த கட்சிகள் இப்ப பிரச்சனைக்கு தீர்வு காணாதது ஏமாற்றமாகவும், வேதனையாகவும் இருக்கின்றது. இதில் ஒரு அரசியல் கட்சி கூட மக்களை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் இல்லாததால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் கிராமங்களில் வந்து ஓட்டு கேட்க வேண்டாம் என்று மாநாட்டின் வாயிலாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது, அப்படி மீறி வரும் அரசியல் கட்சிகள் விலங்குகள் இடம் போய் ஓட்டு கேட்கட்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.