கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (24.12.2023) முதல் பட்டமளிப்பு விழாவானது நடைபெற்றது…

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழாவினை கல்லூரியின் செயலாளர்.K.C. கருப்பணன் அவர்கள் பட்டம் பெறவிருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவின் துவக்கத்தில் கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து ஆண்டு அறிக்கை வாசித்தார். முதல்வரின் அறிக்கையை தொடர்ந்து பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினர் முனைவர்.C. சுப்பிரமணியம் அவர்கள் பட்டம் பெற உள்ள மாணவர்களையும் அவர்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார். பின்பு ஆசிரியர் மாணவர்களின் உறவு நிலை, பாடத்திட்டங்கள் குறித்தும், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் செய்திகள் பலவற்றை எடுத்துரைத்தார். நாட்டின் பின்னடைவுக்கு காரணம் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாகவும் அவர்களின் பங்களிப்பை ஏற்காமல் இருப்பதும் தான் என்றும் கூறினார்.

நமது இந்தியா மக்கள் தொகை பெருக்கம் கொண்ட நாடாகக் கொள்ளாமல் அது மனித சக்தி மிகுந்த நாடாக கருத வேண்டும் என்றும் கூறினார். வெளிநாட்டிற்கு சென்று தனது திறமையை நிரூபிப்பதோடு நமது தாய் நாட்டின் மீது பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டவர்களாகவும் சமுதாயத்தின் நல்ல தலைவர்களாகவும் உருவாக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். கல்வி என்பது சொன்னதைச் சொல்லும் கிளிகள் போலல்ல மாணவர்கள் தானே கீதம் பாடும் குயில்கள் போல் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

உரையின் முத்தாய்ப்பாக தமிழையும், தமிழ்நாட்டையும் இளைய சமுதாயம் மறக்க கூடாது தமிழிலேயே பெயர் சூட்ட வேண்டும் எனவும் பெற்றோர்களைக் காக்க வேண்டும் என்றும் கூறினார். பாரதியார் பல்கலைக்கழகத் தேர்வில் முதல் 10 இடங்களில் மூன்று வேறுவேறு இடங்களை தக்கவைத்து மூன்றாம் இடம் பெற்ற இயற்பியல் மாணவி S.சுகி மற்றும் ஏழாம் இடம் பெற்ற ஆடை வடிவமைப்புத் துறை மாணவி M. அப்சரா மற்றும் ஒன்பதாம் இடம் பெற்ற மேலாண்மை துறை மாணவி J.வினிஷா ஆகியோர்களுக்கு தமிழ் துறை தலைவர் முனைவர்.R. செந்தில் ராணி அவர்கள் பெயர்களை வாசிக்க பட்டம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

அவரைத் தொடர்ந்து ஆங்கிலத் துறை தலைவர் முனைவர். சிவகுரு விக்னேஷ், துணை முதல்வர் வணிகவியல் துறைத் தலைவர் முனைவர்.CHI. நஞ்சப்பா, கணினி அறிவியல் துறைத் தலைவர் M.சுபா, வேதியியல் துறைத் தலைவர் மாலதி, கணிதத் துறைத் தலைவர் ஆரோக்கியராஜ், ஆடை அலங்கார வியல் துறைத் தலைவர் ஷாலினி, இறுதியாக மேலாண்மை துறைத் தலைவர் முனைவர்.R. ராஜசேகர் ஆகியோர் துறை ரீதியாக பட்டங்களை பெறவிருக்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை வாசிக்க சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் பட்டங்கள் வழங்கப்பட்டு மாணவர்கள் பெற்றுச்சென்றனர். மேலும் இவ் விழாவில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாத மாணவ மாணவிகளின் பெயர் பட்டியலை நுண்ணுயிரியல் துறை தலைவர் முனைவர் மஞ்சு அவர்கள் வாசித்தார். மேலும் பட்டமளிப்பு உறுதிமொழியினை கல்லூரியின் முதல்வர் ஆ. மோகனசுந்தரம் அவர்கள் வாசிக்க அதனை மாணவ- மாணவிகள் திரும்பக் கூறினார்கள். இவ்விழாவில் அறக்கட்டளைத் தலைவர் வெங்கடாச்சலம் அறங்காவலர்கள் கவியரசு கால்நடை மருத்துவர் கண்ணன் இணைச் செயலாளர் கெட்டிமுத்து, ஜோதிலிங்கம், சென்னிமலைக் கவுண்டர், இயக்குநர் கணேசன் மற்றும் முதன்மை செயல் அலுவலர் கௌதம் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக நாட்டுப்பண்னுடன் விழா இனிதே முடிவடைந்தது