கவுந்தப்பாடி அருகில் உள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை- டெக் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஈரோடு நடுநகர் அரிமா சங்கம் ஆகியோர் இணைந்து 22.12.2023 (வெள்ளிக்கிழமை) அன்று நடத்திய இரத்ததான முகாம் கல்லுாரியின் செயலாளர் திரு. K.C. கருப்பணன் அவர்கள் தலைமையில் நடந்தது. கல்லூரியின் தலைவர் திரு.P.வெங்கடாசலம், இணைச்செயலாளர் திரு.G.P.கெட்டிமுத்து, இயக்குநர் திரு. K.R. கவியரசு மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் திரு. G.கௌதம் ஆகியோர் இரத்ததான முகாமினைத் துவக்கி வைத்தனர்.
கல்லுாரியின் முதல்வர் திரு. S.பிரகதீஸ்வரன் அவர்கள் இரத்ததானத்தின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு குறித்து மாணவ மாணவிகளிடம் எடுத்துரைத்தார். இரத்ததான முகாமின் அனைத்து ஏற்பாடுகளையும் அரிமா K.இராஜேந்திரன் தலைவர், அவர்கள் சிறப்புடன் செய்தார். இம்முகாமில் கல்லூரியின் 85 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். இரத்ததான முகாமில் பங்கு பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அரிமா திட்டக்குழுவின் சார்பாக பழச்சாறு மற்றும் சான்றிதழ் கொடுத்து சிறப்பிக்கப்பட்டது. இரத்ததான முகாமின் அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் இளஞ் செஞ்சிலுவைச் சங்க ஆலோசகர் திரு.B.சதாசிவன் மற்றும் துறைத்தலைவர்கள் ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்