உலகத் தமிழ் நெறிக் கழகம் சார்பில் வீரமங்கை வேலு நாச்சியாரின் 227-வது நினைவு நாள் ,திருவள்ளுவர் நாட்காட்டி வெளியீட்டு விழா கோவை அண்ணாமலையாரங்கில் வள்ளியப்பன் தலைமையில் நடைபெற்றது. உலகத் தமிழ் நெறிக் கழக செயலாளர் சொ. சிவலிங்கம்,
துணைத் தலைவர் குரு பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எழுத்தாளர் ஜீவபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ஆற்றல்மிகு, விவேகமிகு பெண்ணாக வேலுநாச்சியார் திகழ்ந்து, வெள்ளையனை விரட்டினார்.தன் கணவர் ஆங்கிலேயரால் கொல்லப்பட்டதை நினைத்து வேதனைப் படாமல் அந்நியரை எதிர்த்து ஆவேசமாக போரிட்டவர். அவர் புகழை அனைவரும் போற்ற வேண்டும் என்றார்.
திருவள்ளுவர் நாட்காட்டியினை பார்வார்டு பிளாக் கட்சித் தலைவர் நவமணி வெளியிட்டார். பல துறைகளில் சாதனை புரிந்தோருக்கு விழாவில் விருது வழங்கப்பட்டது. பொருளாளர் ரமேசு,
ஆ.வெ.மாணிக்கவாசகம், இருகூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.