நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் திரு.குணேஸ்வரன், உதகை படகு
இல்ல மேலாளர் திரு.சாம்சன் கனகராஜ் உட்பட பலர் உள்ளனர்