திருவள்ளூர் விவசாயிக்கு பிரதமர் மோடி பாராட்டு…

நானோ யூரியா உரம் அறிமுகம் டிரோன் மூலம் மருந்து தெளிப்பு மத்திய அரசின் பல்வேறு நல திட்டங்களில் பயன்பெற்ற நாடு முழுவதும் உள்ள பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார் மோடி வணக்கம் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார் அப்போது திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு கிராமத்தில் வெங்கல் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரி கிருஷ்ணனுடன் 43 பேசுகையில் வேளாண்மையில் நானோ யூரியா உரம் அறிமுகம் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பு போன்ற நவீன நடைமுறைகளை பின்பற்றுவதற்காக ஹரி கிருஷ்ணன் பிரதமர் மோடியிடம் பேசினார் அவரும் பாராட்டு தெரிவித்தார் இது குறித்து விவசாயி ஹரிகிருஷ்ணன் கூறுகையில் என் வாழ்நாளில் பிரதமர் மோடியிடம் பேசியது என் வாழ்நாளில் மறக்க முடியாது விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நான் பி எஸ் சி கணிப்பொறியியல் பட்டம் பெற்று தனியார் வங்கியில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வந்தேன்2002 ஆம் ஆண்டு எனது தந்தை மறைவுக்குப் பின் முழு நேர விவசாயத் தொழில் இறங்கினேன் ஐந்து ஏக்கர் நிலத்தில் நெல் கரும்பு பயிரிட்டு உள்ளேன் நீர்மூலம் கரையும் உரங்களை எளிதில் பயன்படுத்தும் வகையில் டிரோன் மூலம் தெளிக்கவும் பயிற்சி பெற்று வருகிறேன் மேலும் நவீன முறையில் பயிர் சாகுபடி உற்பத்தி செய்யும் வேளாண் தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் பயிற்சி பெற்றுள்ளேன் விவசாயம் செய்வதில் நவீன முறையை பின்பற்றி உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது போன்ற ஆலோசனைகளை பிரதமர் மோடி இடம் இருந்து பெறும் போது விவசாயியான நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்