கோவை சிறையில் கைதியிடம் கஞ்சா சிக்கியது…

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடையே போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க சிறப்பு கண்காணிப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுஇந்த குழுவினர் நேற்று கைதிகளிடம் திடீர் சோதனை நடத்தினர். அப்போது திருப்பூரை சேர்ந்த ஜெயராம் (வயது 23) என்பவர் தனது ஆடைக்குள் பதுக்கி வைத்திருந்த 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார்ஜெயராம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.