மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு விடைபெற்று சென்ற கேப்டன் விஜயகாந்த்…

அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத் தலைவர் கோவை சி.எம். ஸ்டீபன் ராஜ் வேதனையுடன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். நான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நெகமம் நெப்போலியன் கே.வி. கந்தசாமி அவர்களிடம் கோவை கோபாலபுரத்தில் உள்ள சினிமா கம்பெனியில் பணியாற்றியபோது சுங்கம் விக்னேஷ் மஹால் திருமண மண்டபம் திறப்பு விழாவும் திரைப்பட நடிகர் திரு. சத்யராஜ் அவர்களின் இரு தங்கைகளுக்கும் முதல் திருமணமும் அங்கு நடைபெற்றது அந்த திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள், கோவை கோபாலபுரத்தில் உள்ள சினிமா கம்பெனிக்கு திரு. கே. வி. கந்தசாமி அவர்களை சந்திக்க வந்தார் அப்பொழுது கே. வி.கே. அவர்கள் அவரை இருக்கையில் அமரச் சொல்லியும் அவர் மறுத்துவிட்டார். அவர் மீண்டும் வலியுறுத்தி தான் அவரை அமரச் செய்தார். அந்த செயல் அங்கு சூழ்ந்துள்ள அனைவரையும் வியக்கச் செய்தது ஏனென்றால் சினிமா துறையில் அவர் மிகுந்த உச்சத்தில் இருந்த காலம் அது ஆனாலும் கூட மிகுந்த தாழ்மையால் மற்றவர்களை மதிக்கின்ற தன்மையால் அவர் இந்திய தேசம் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரும் போற்றுகின்ற பாராட்டுகின்ற உயர்ந்த இடத்தில் அவரால் வளர முடிந்தது, இன்று அவர் நம்மை விட்டு அவர் பிரிந்து சென்றாலும் தமிழ் உள்ளவரை தமிழர்கள் உள்ளவரை அவர் நினைவுகள் என்றுமே இந்த பூமியிலே நிலைத்து நிற்கும் பரிசுத்த வேதாகமத்தில் ஒரு வசனம் உண்டு உயிர்ப்பும் உயிரும் நானே எண்ணில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான் அந்த வசனத்திற்கு ஏற்றபடி நமது அன்பு சகோதரர் விஜயகாந்த் அவர்கள் புகழ் இந்த மண்ணிலே என்றும் நிலைத்திருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தாருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். கோவை. சி.எம். ஸ்டீபன் ராஜ் அறிக்கையில் இ‌வ்வாறு கூறியுள்ளர்.