தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை போலீசுக்கு பயப்படாமல் விற்ற மூன்று பேருக்கு குண்டர் தடுப்பு காவல் சட்டம்…

ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு சமுதாய நல பணிகள் ஆவடி போலீஸ் கமிஷனர் கி சங்கர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்களை டீக்கடை மளிகை கடை சிறு கடைகளில் விற்பனை செய்து வந்தனர் இதை அடியோடு ஒழித்து கட்ட தனி காவல் படை அமைக்கப்பட்டுள்ளது இவர்களோடு இணைந்து போதை பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது இந்த அதிரடி சோதனையில் மாங்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செந்தில்குமார் வயது 44 தகப்பனார் பெயர் லோகநாதன் 2 வது தெரு தெற்கு காமாட்சி நகர் மாங்காடு 2. பிரதாப் சிங் கிரிஸ்டோபர் வயது 34 தகப்பனார் பெயர் கோவில் துரை பஜார் தெரு பூச்சி அத்தி பேடு திருவள்ளூர் மாவட்டம் 3. ஜெயபாலன் வயது 41 தகப்பனார் பெயர் குணசேகர பாண்டியன் முதல் குறுக்கு தெரு ஜே பி நகர் புத்தகரம் சென்னை இவர்கள் மூன்று பேரும் செய்த தவறை உணராமல் தொடர்ந்து குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் ஆணை பிறப்பித்துள்ளார்