அனைத்து நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்…

புத்தாண்டை முன்னிட்டு நீலகிரி மாவட்ட உதகை கலைஞர் அறிவாலயத்தில் திமுகவினர் புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாறினர். நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களை, மாவட்ட கழக துணைச் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் நாசரலி, மற்றும் குன்னூர் கூடலூர் கோத்தகிரி உதகை கழக நிர்வாகிகள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், நகர-ஒன்றிய-பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் நீலகிரி திமுக கழக மாவட்ட செயலாளரை சந்தித்து ரோஜா மலர்கள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர், மற்றும் அன்று கூடியிருந்த அனைத்து நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்