கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் வசூல் செய்யப்பட்டு ஐக்கிய ஜமாத் பேரவை சார்பாக சுமார் 8 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களைதூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலுக்கு கொன்று சென்று அங்கு பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகள் நேரடியாக கள ஆய்வு செய்து பிறகு தூத்துக்குடி ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் ஜாமியா பெரிய பள்ளிவாசல் மூலம் தூத்துக்குடி பூபாண்டியபுரம், லஸால்நகர், கலைஞர் நகர், கோழிப்பண்ணை கிழக்கு வடக்கு, லூர்த்தம்மாள்புரம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் M.இம்தாதுல்லாஹ் ஃபாஜில் பாகவீ மற்றும் தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி மௌலவி s.முஜீபுர் ரஹ்மான் P.மீராசா K.மீராசா ஆகியோரின்ஆலோசனைப்படி மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாத் பேரவை ஹாஜி முஹம்மது ஷரீஃப் தலைவர் தலைமையில்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்யப்பட்டது இந்நிகழ்வின் போது ஐக்கிய ஜமாத் பேரவைநிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் S.அக்பர் அலி செயலாளர், கமல்தின் பொருளாளர், மஸ்ஜிதுல் அக்ஷா, S.முஹம்மது இல்யாஸ், ஹஜ்ரத், காட்டூர் பள்ளிவாசல் S.M.அய்யூப், துணைச்செயலாளர் ஐக்கிய ஜமாஅத் பேரவை, I.ஷாணவாஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் காட்டூர் பள்ளிவாசல்.
மற்றும் காட்டூர் பள்ளிவாசல் நிர்வாகத்தின் தன்னார்வலர்கள்இணைந்து இந்நிகழ்வை மிகவும் சிறப்பித்து தந்தனர்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண பொருட்களை பெற்ற பிறகு இவ்வாறு கூறினார்கள். 5கி அரிசி, மளிகை பொருட்கள் பாய் வாளி ஜெக் லுங்கி, நைட்டி டவல், போர்வை, பால் பவுடர் 19 பொருட்கள் அடங்கிய, நிவாரண பொருட்களை கிடைத்ததில் மிகவும் மன மகிழ்ச்சி அடைகின்றோம் என்று அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் நன்றினையும் தெரிவித்தனர். சுமார் 8 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்களை 580குடும்பங்களுக்கு நேரடியாக வழங்கியதில்மன மகிழ்ச்சி அடைந்தனர்நிவாரண பொருட்கள் கொண்டு செல்வதில் பாதிக்கப்பட்ட மக்களை சரியான விதத்தில் அடையாளம் கண்டறிந்துமேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாத்திற்கு உதவிய தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபைநன்றிகூறினார்கள்.
மேட்டுப்பாளையம் அனைத்து பள்ளிவாசல்கள் இணைந்து நிவாரண பொருட்கள்…
