காவலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கொள்ளையன் கைது…

கோவை கணபதி,மணியக்காரம் பாளையம , பாரதி ரோட்டை சேர்ந்தவர் தீன தயாளன் ( வயது 35) காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று நஞ்சப்பா ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது பையில் இருந்த 1,490 ரூபாயை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இது குறித்து தீன தயாளன் காட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பத்ரகாளி வழக்கு பதிவு செய்து செல்வபுரம் எல்.ஐ.சி காலனியை சேர்ந்த ரஞ்சித் குரு என்ற கும்கி ரஞ்சித் (வயது 28) என்பவரை கைது செய்தார். கத்தியும் பணமும்பறிமுதல் செய்யப்பட்டது.