கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் ,நேரு வீதியைச் சேர்ந்தவர் சாலமோன் ஜார்ஜ். இவரது மனைவி ராஜன் வசந்தி (வயது 57 இவர் நேற்று குனியமுத்தூர் நேரு வீதியில் நடந்து சென்றார் .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்று விட்டான் .இதுகுறித்து ராஜன் வசந்தி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .இதே போல கோவை ஒண்டிப்புதூர், சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மகள் ஹர்ஷினி (வயது 25)ஐ .டி .ஊழியர். இவர் நேற்றுவேலை முடிந்து சாஸ்திரி நகர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த ஒரு பவுன் செயினை பறித்து விட்டு தப்பி சென்று விட்டான். இது குறித்து ஹர்ஷினி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதே போல கோவை பீளமேடு ,நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ், இவரது மனைவி அக்னாஸ் ( வயது43) இவர் நேற்று உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேரு நகர் 6-வது வீதியில் நடந்து வந்தார் .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கடந்த 3 பவுன் தங்கச் செயினை பறித்து விட்டு தப்பி சென்று விட்டான். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து,மர்ம ஆசாமிகளைதேடி வருகிறார்கள். கோவையில் ஒரே நாளில் 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.