குடியாத்தத்தில் நகை வியாபாரியை மடக்கி தங்க நகைகளை கொள்ளை அடித்த மோட்டார் சைக்கிள்களில் வந்த கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை வீச்சு…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் நகை வியாபாரிகள் ரங்கநாதன் அன்பரசன் இவர்கள் இருவரும் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி உள்ள பரதராமி பகுதிக்கு சென்று உற்பத்தி செய்த தங்க நகைகளை விற்று வருவது வழக்கம் நேற்று இரவு தங்க நகைகளை விற்றுவிட்டு மீதம் இருந்த விற்கப்படாத நகைகளை எடுத்துக்கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர் பரதராமி அருகே வீர செட்டி பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் வரும்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு பேர் முகத்தை மறைத்து ஹெல்மெட் போட்டுக் கொண்டிருந்தனர் நகை வியாபாரிகளின் மோட்டார் சைக்கிள்களை மடக்கி எடு எடு சீக்கிரம் வைத்திருக்கும் நகைகளை கொடுத்து விடு இல்லை என்றால் நீங்கள் குளோஸ் என மிரட்டவே பயந்து போன நகை வியாபாரிகள் கையில் வைத்திருந்த 40 சவரன் தங்க நகைகளை மதிப்பு ரூபாய் 20 லட்சம் ஆகும் எடுத்து கொடுத்து விட்டனர் இது குறித்து குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது குடியாத்தம் போலீஸ் துணை சூப்பிரண்ட் ராமமூர்த்தி தலைமையில் தங்க நகை கொள்ளையர்களை தேடி வருகின்றனர் மேலும் தங்க நகை திருடு போன இடத்தில் வைக்கப்பட்டிருந்த சி சி டிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்