மாஜி. தலைமை ஆசிரியர் வீட்டில் 51 பவுன் நகை திருட்டு…

கோவை புது சித்தா புதூர், பி .கே .ஆர். ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 65) தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் 21- 5 -20 22 அன்று வீட்டை பூட்டிவிட்டு மனைவியின் உறவினர் வீட்டுதிருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். வீட்டில் 51 பவுன் நகைகள் அலமாரியில் வைத்திருந்தார் .இந்த நிலையில் 26- 9 -20 22 அன்று கிருஷ்ணனும், அவரது மனைவியும் கோத்தகிரியில் நடந்த உறவினர் வீட்டு பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். பிறகு வீட்டுக்கு வந்து விட்டனர்.20 .11 -2023 அன்றுவீட்டில் அலமாரியை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 51 பவுன் நகைகளை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர் .இதுகுறித்து கிருஷ்ணன் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில்அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த அமுதா என்ற பெண் மீதும், ஏ.சி. பழுது பார்க்க வந்த சாதிக் என்பவர் மீதும் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து காட்டூர் போலீஸ்இன்ஸ்பெக்டர் பிரபு தாஸ் வழக்கு பதிவு செய்து சரணை நடத்தி வருகிறார்.