கோவையில் 2பெண்களிடம் செயின் வழிப்பறி …

கோவையில் 2பெண்களிடம் செயின் வழிப்பறி. கோவை ஜன6 கோவை குனியமுத்தூரில் உள்ள மணிகண்டன் நகரைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 47) இவர் நேற்று அங்குள்ள ஐயப்பன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நடந்து சென்றார். அப்போது எதிர்திசையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த கோல்ட் கவரிங் செயினை பறித்துவிட்டுத்தப்பி ஓடிவிட்டார் .அந்த கோல்டுகவரிங் செயினில் அரை பவுன் எடை கொண்ட தாலி காசு, தாலி குண்டு இணைக்கப்பட்டிருந்தது.இதே போல பீளமேடு , காளப்பட்டி ரோட்டில் உள்ள நேரு நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா ராம். இவரது மனைவி சுகந்தி ( வயது 42) நேற்று அங்குள்ள பெரியார் நகர் ரோட்டில் தனது மகளுடன் நடந்து சென்றார் .அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்து விட்டு தப்பி சென்று விட்டான். இது குறித்து சுகந்தி பீளமேடு போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.