ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸில் தரவுகளின்படி இந்தியா மற்றும் ஆசியாவின் 2024-ம் ஆண்டில் ஆசியாவில் மற்றும் இந்தியாவின் முதல் பணக்காரராக அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இடம் பிடித்துள்ளார். இதுவரை இந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
முன்னதாக, கௌதம் அதானி ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அவரது நிகர மதிப்பு பல இடங்கள் சரிந்ததது குறிப்பிடத்தக்கது. அதானி குழுமத்தின் வளர்ச்சி $100 பில்லியன் செலவினத் திட்டம், இலங்கையில் அதன் துறைமுகத் திட்டத்திற்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் அண்மையில் மூன்று மாநிலங்களில் பாஜகவின் வெற்றிக்குப் பிறகு ஒட்டுமொத்த சந்தை வளர்ச்சி ஆகியவை இந்த வாய்ப்புக்கு பெருமளவில் பங்களித்ததாக கூறப்படுகிறது. அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலைகளில் ஏற்பட்ட சரிவின் விளைவாக, அதானியின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 60% குறைந்து, 69 பில்லியன் டாலர்கள் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.