பைக்- ஸ்கூட்டர் மோதல். பெண் சாவு…

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 55 )இவர் தற்போது ஒண்டிப்புதூரில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி லலிதா ( வயது 55) நேற்று கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டரில் செட்டிபாளையம்- பாப்பம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். சின்னக்குயிலிபிரிவு அருகில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒருபைக் இவர்களது ஸ்கூட்டர் மீது மோதியது .இதில்ஸ்கூட்டரில் பின்னால் இருந்த லலிதா படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். ஸ்கூட்டர் ஓட்டி வந்த மணிகண்டன் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து மணிகண்டன் சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக பைக் ஓட்டி வந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.