கோவை மாவட்டத்தில் LPF போன்ற வேலை நிறுத்தத்தில் பங்குபெறாத தொழிற் சங்கங்த்தினர் இயக்கிய அரசு பேருந்துகள்…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சில தொழிற் சங்கங்கள் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்குவதுடன் ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தைகளுக்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் இன்று 09.01.2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தெரிவித்து உள்ளனர்.

கோவையில் உள்ள 23 பணிமனைகள் மூலம் சுமார் 1,250 பேருந்துகள் இயக்கப்படுகின்றன இவற்றில் சுமார் 16 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் போராட்டத்தில் 10 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர் என தொழில் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கு இடையே வழக்கமான பேருந்து சேவையை தொடர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி எல்.பி.எஃப் தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாத இதர தொழில் சங்கத்தை சேர்ந்த ஓட்டுநர் நடத்துனர்களை வைத்து முழுமையாக பேருந்துகள் வேலையை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட பொறியாளர் ஸ்ரீதர் தெரிவித்து உள்ளார். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பயிற்சி பெற்ற வெளி ஓட்டுநர்களின் பட்டியலை பெற்று பேருந்துகளை இயக்கவும் தேவைப்படும் பட்சத்தில் ஓய்வு பெற்ற ராணுவ ஓட்டுனர்களை வைத்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்தில் இன்று காலை முதலே டPF போன்ற வேலை நிறுத்தத்தில் பங்குபெறாத தொழில் சங்கத்தினருடன் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.