நீலகிரி மாவட்டம் உதகை அப்பர் பஜார் பகுதியில் அமைந்துள்ள குழந்தை இயேசு திருத்தலத்தின் 40 ஆம் ஆண்டு திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது . கடந்த புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆண்டு விழா சிறப்பிக்கப்பட்டது . 1984 ஆம் ஆண்டு செயின்ட் மேரீஸ் ஆலய பங்கு குரு குன்னத் அவர்களின் முயற்ச்சியால் சிறிய ஷேடில் குழந் தை இயேசு ஆலயம் துவக்கப்பட்டது . 1985 ஆம் ஆண்டு எஸ் .டி .ஆரோக்கியசாமி , அமிர்தராஜ் மற்றும் பால்ராஜ் அவர்களின் உழைப்பால் அன்றைய ஆயர் அருளதாஸ் ஜேம்ஸ் இந்த சிற்றாலயத்தை கட்டி எழுப்பி அர்ப்பணித்தார் . இன்று 40 ஆம் ஆண்டு முடிவுற்று திகழ்கிறது . ஞாயிற்று கிழமை காலை 10.30 மணிக்கு மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் பங்கு குரு செல்வநாதன் மறைமாவட்ட காசாளர் ஸ்டீபன் லாசர் உதவி பங்கு குரு பிரெட்ரிக் இணைந்து ஆடம்பர திருப்பலி நடைபெற்றது. இந்த வருடம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சுற்றுசூழலை பாதுகாக்க கத்தோலிக்க திருச்சபை மிக பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது . இந்த மாதம் இயற்கையில் உறைந்திடும் இறைவனை வழிபட்டு இயற்கையை பாதுகாப்போம் என்று திருத்தந்தை அழைத்துள்ளார் . பூமிப்பந்து உயிர்கள் அனைத்தின் பொது வீடு ” என்ற பதாகைகளை ஏந்தி பவனியுடன் திருப்பலியை ஆயர் வழிநடத்தினார் . ஆயர் அமல்ராஜ் கூறும் போது , ” திருத்தந்தை பிரான்சிஸ் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று அழைத்துள்ளார் .நம் சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது நம் கடமை .பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளுக்கு சுற்றுப்புற சூழலை பற்றி சொல்லிக்கொடுங்கள் . இந்த மாதம் நான்கு ஞாயிற்று கிழமைகளில் ‘ மானிட நேயம் உலகின் பொதுச் சமயமாகிட ” ‘ புவியை காப்பதில் முன்னோடியாக திரு அவை’ .மானிடம் வளர்ப்பதே மாந்தர் ‘ என்ற தலைப்பில் திருப்பலி நடைபெறும் . இன்று குழந்தை இயேசு திருத்தலத்தில் இருந்து இந்த சுற்றுசூழல் பாதுகாப்பு யுக்தியை துவக்குகின்றோம் .. குழந்தை இயேசு தன் கரத்தில் பூமியை தாங்கி பிடித்துள்ளார் . ” பூமிப்பந்து உயிர்கள் அனைத்தின் போது வீடு
என்பதை உணர்ந்து இந்த குழந்தை இயேசு திருவிழா திருப்பலியை இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. மதியம் அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது .
மதியம் 3 மணிக்கு மலையாளத்தில் புனித சூசையப்பர் ஆலய பங்கு குரு சிஜோ ஜார்ஜ் எட க்குடியில் தலைமையில் நடைபெற்றது . ” இந்த குழந்தை இயேசு சிற்றாலயத்தில் தான் முதலில் மாநந்தவாடி மறைமாவட்டம் ஊட்டி கிளை துவக்கப்பட்டது என்று நினைவுகூறினார் .
மாலை ஐந்து மணிக்கு கல்லட்டி புனித சூசையப்பர் ஆலய பங்கு குரு மரிய சூசை தலைமையில் திருப்பலி நடைபெற்றது . பிறை வடிவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் குழந்தை இயேசுவின் ஆடம்பர தேர் பவனி அப்பர் பஜார் , அஞ்சலந்தர், லோயர் பஜார், போன்ற சாலைகள் வழியாக வந்து ஆலயத்தை அடைந்தது, இதில் பங்கு மக்கள் பொதுமக்கள் பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது . ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் அனைத்து மதத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . அனைத்து ஏற்பாடுகளை பங்கு குரு செல்வநாதன் , உதவி பங்கு குரு பிரெட்ரிக் , டீக்கன் ஞனசெல்வம் , வேதியர் .நாதன் அன்பிய பொறுப்பாளர் ஜான்சி விமலன் , சகாயராஜ் , ரூபஸ் , விமல்குமார் , பிரின்ஸ் , பீயோ ஜெரால்டு ஜோ மற்றும் இளைஞர் குழு செய்திருந்தனர் .