கோவையை அடுத்த துடியலூர் பக்கம் உள்ள வரப்பாளையம் மலைப்பகுதி அருகே தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில்படிக்கும் மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சொந்தமான பஸ் வந்து கொண்டிருந்தது. திடீரென்று அந்த பஸ் நிலை தடுமாறி ரோடு ஓரப்பள்ளத்தில் இறங்கியது .இதனால் பஸ்சில் இருந்த மாணவ -மாணவிகள் தங்களது இருக்கையில் இருந்து சரிந்து விழுந்தனர். இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். டிரைவர் பஸ்சை கவனக்குறைவாக ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பயிற்சி பெற்ற டிரைவர்களை கொண்டு பஸ்சை இயக்க வேண்டும் .மாணவ மாணவிகளுக்கு பஸ் பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்துக்கு பெற்றோர்கள்கோரிக்கை விடுத்தனர்.
கோவை அருகே பள்ளத்தில் இறங்கிய தனியார் ஸ்கூல் பஸ்.மாணவர்கள் காயம்…
