திருச்சியில் அதிமுக ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் கூட்டம்…

அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் செயல் வீராங்கனை ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார். புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ராஜ்மோகன், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சாமிகண்ணு ஆகியோர் வரவேற்றனர். ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களும் வருவாய் மாவட்டங்களிலும் வெற்றிகரமாக கூட்டம் நடத்தி இன்றைக்கு நாம் திருச்சி வருவாய் மாவட்டத்தில் கூட்டம் சிறப்போடும் சீரோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு யார் அதிகாரம் கொடுத்தது சட்ட விதியை உருவாக்கிய புரட்சி தலைவி, எம்.ஜி.ஆர். கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் கட்சியின் சட்ட விதி அந்த சட்ட விதியை மாற்றவோ திருத்தம் செய்யவோ, ரத்து செய்யவோ கூடாது. தொண்டர்களின் உரிமையை மீட்கின்ற போராட்டம் தான் தர்மயுத்தம். இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மீண்டும் அந்த உரிமையை தொண்டர்களுக்கு கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நம்மை நோக்கி பல கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. பாமர மக்களும், ஏழைகளும், படித்தவர்களும் பொதுமக்களும் கட்சித் தொண்டர்களும் ஆதரவு அப்படியே நம்மிடம் இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடம் மு.க.ஸ்டாலின் கொடநாடு கொலை வழக்கை 3 மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்று கூறினார். தற்போது 3 வருடங்கள் தாமதமாகி உள்ளது. இதன் மூலம் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் கூட்டணி அமைத்துள்ளார்கள் என்று தமிழக மக்கள் சந்தேகிக்கிறார்கள். கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தவர்கள் ஆதரவு கிடைக்கும் தற்போது நாம் அனைவரும் இணைந்து செயல்பாட்டால் வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் சரி நாம் வெற்றி பெறுவது உறுதி இவ்வாறு அவர் பேசினார் இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திருச்சி மாநகர் மாவட்ட ஜே பேரவை செயலாளர் ஜவஹர்லால் நேரு துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி மாவட்ட கழக நிர்வாகிகள் செயல் வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஓபிஎஸ் பேச்சால் அதிமுகவின் நிர்வாகிகள் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.