ஆபத்தான பயணத்தில் வாகன ஓட்டிகள்,,, பெரும் விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
தினந்தோறும் திருச்சி சாலையில் இருந்து அவனாசி சாலையையும், அவினாசி சாலையில் இருந்து திருச்சி சாலையையும் இணைக்கும் சாலையாக இருகூர், சின்னியம்பாளையம் சாலை உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும், இருசக்கர வாகனங்களும், பொதுமக்கள் பயணிக்கும் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களும் பயணித்து வருகிறது. சின்னியம்பாளையம்,இருகூர் எல்லையில் உள்ள தரையடி பாலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் பாலத்தின் ஒரு பகுதி விரிசல் விட்டு எப்போது உடைந்து விடும் என்ற அபாயத்தில் உள்ளது.பாலம் இடிந்து விழுந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள அந்த தரையடி பாலத்தில் மழை நீரும், சாக்கடை கழிவு நீரும் கலந்து மிகப்பெரிய துர்நாற்றமும் பாலத்தின் கீழ் உள்ள நீர் செல்லும் வழிகள் அனைத்தும் அடைத்து பாலத்தின் மேலே சாக்கடை நீர் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளதாகும் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட இருகூர் பேரூராட்சி மற்றும் சின்னியம்பாளையம் ஊராட்சி நிர்வாகங்கள் உடனடியாக தலையிட்டு இந்த பாலத்தை சரி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுகின்றனர். இல்லை என்றால் மிக விரைவில் மிகப்பெரிய விபத்து ஏற்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.அது போலவே இன்று நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 25 வயது மதிக்கதக்க வாலிபர் இந்த பாலபழுதின் காரணமாக,2 வாகனங்கள் மோதிக்கொண்டதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இருகூர், சின்னியம்பாளையம் தரை பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தால் தூக்கி வீசப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு…
